தமிழ் குடும்பத்துக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்துவதை எதிர்த்து, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

குயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகரில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் அவர்களது பிள்ளைகளுடன் நாடு கடத்தப்படவுள்ளனர்.

இதற்காக அவர்கள் கடந்த வாரம் மெல்பேர்னில் உள்ள குடிவரவு முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.

அவர்கள் நாடுகடத்தப்படுவது உறுதியாகி இருப்பதாகவும், அதனை தடுக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நாடு கடத்தலை தடுக்க முடியும் என்று, நம்பிக்கையில் பெலோயிலா நகர மக்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அவர்களை நாடுகடத்துவதற்கு எதிராக இணையம் ஊடாக கைச்சாத்திடும் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விண்ணப்பத்தில் இதுவரையில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.