பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கடற்படையினர் திட்டம்!

Report Print Mohan Mohan in சமூகம்

வட்டுவாகல் கடற்படையினர் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 200 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இவ்வாறு கடற்படையினர் பரிசீளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுவாகல் பகுதி பொதுமக்களிடம் நேற்றையதினம் சினேக பூர்வமாக கலந்துரையாடிய அதிகாரி ஒருவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் 654 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி பொதுமக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், 200 ஏக்கர் நிலங்களை முதற்கட்டமாக விடுவிப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.