அமெரிக்காவுக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ள கண்டி வன்முறை! தாமரா குணநாயகம்

Report Print Ajith Ajith in சமூகம்

கண்டி வன்முறை சம்பவமானது, அமெரிக்காவுக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தாமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

வன்முறை சம்பவங்கள் இலங்கையின் பிரச்சினையில் சர்வதேசத்தின் தலையீடு என்ற வொஷிங்டனின் கோரிக்கைகளுக்கு சாதகமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அழுத்தம் பிரயோகிக்க, கண்டி வன்முறை வலுச்சேர்க்கும் என்று அவர் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் போதே பிரதமரை மாற்றவேண்டாம் என்று வொஷிங்டனின் தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தாகவும் தமரா குணநாயகம் கூறியுள்ளார்.