கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்துபவர்களுக்கான அறிவித்தல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின், கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தின் திருத்த பணிகள் இடம்பெற்று வருவதால் போக்குவரத்திற்காக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு உரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்து காணப்படுவதனால் திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இவ் வீதியூடாக மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி, முச்சக்கர வண்டி போன்ற சிறியரக வாகனங்களை தவிர ஏனைய கனரக வாகனங்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதி பாலத்தின் வழியாக திருகோணமலை, மூதூர், கிண்ணியா போன்ற கொழும்பு பேருந்துகள் பிரயாணம் செய்வது வழக்கமாகக் காணப்படுகிறது.

எனவே பால திருத்த வேலை முடியும் வரை இவ் வழியை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.