இலங்கை வரும் பேஷ்புக் பிரதிநிதிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

பேஷ்புக் சமூக வலைத்தளத்திற்கு பிரவேசிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள தடை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பேஷ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இந்தியாவில் பேஷ்புக் நிறுவனத்தின் பிரதான பிரதிநிதிகளாக செயற்படும் பிரதிநிதிகளே இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.

இவர்கள் இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரை நாளைய தினம் சந்திக்க உள்ளனர்.

பேஷ்புக் வலைத்தளத்திற்குள் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

இந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக நாளை மறுதினம் முதல் பேஷ்புக் வலைத்தள பயன்பாடு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.