ஜப்பானில் ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

ஜப்பானில் வசித்து வரும் முஸ்லிம் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹொட்டலில் நேற்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மரப்பன, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க உட்பட இலங்கை அரச பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

இதனிடையே ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இடையிலான சந்திப்பு இதே ஹொட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.

தொழில் வல்லுநர்கள், மாணவர் சங்கம் உட்பட பல்வேறு துறைசார்ந்த நபர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டதுடன் ஜனாதிபதி சிறப்பான வரவேற்பை வழங்கியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.