விசா விதிமுறைகளை மீறி 23 இந்தியர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

விசா விதிமுறைகளை மீறி இலங்கையில் வர்த்தகம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பெண்கள் உட்பட 23 இந்தியர்களை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று கைது செய்துள்ளது.

சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் (விசாரணை) ஜீ.வி.காரியவசம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் துணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் மேலும் 9 பேர் கொழும்பு - செட்டியார் தெருவில் சாஸ்திரம் கூறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 5 பேர் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்தாகவும் அவர் கூறியுள்ளார். திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்கள் 30 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள்.

விசாரணைகளை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.