முன்னாள் போராளிகள் குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட நாமல் எம்.பி

Report Print Murali Murali in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் இன்றும் தொடர்வது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் இன்றும் தொடர்வது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சுய விருப்புடன் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றும் சிறப்பான முறையில் செயற்படுகின்றனர்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார்.