அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லையென குற்றச்சாட்டு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா பிரதேச செயலகங்களில் இடம்பெறும் அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு அதிகளவான பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் கருத்து தெரிவிக்கையில்,

“வவுனியாவில் இடம்பெற்று வரும் அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு பொது அமைப்பின் பிரதிநதிகள் சிலருக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றன.

குறிப்பாக கிராம அபிவிருத்தி சங்கங்கள், கமக்காரர் அமைப்புகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுகின்ற போதிலும், பல கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.

ஆகவே எதன் அடிப்படையில் இவ்வாறு கிராம அபிவிருத்தி சங்கங்கள் சிலவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்பதில் சந்தேகம் எழுகின்றது.

அத்துடன், சில பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்கள் தமக்கு சார்பானவர்களை கூட்டம் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் அழைத்து தனக்கு சார்பான விடயங்களை கதைக்குமாறு பணிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.