பாதாள குழுவினருக்கு ஆயுதம் தயாரிப்பு: சீனிகொட பெட்டா கைது!

Report Print Ajith Ajith in சமூகம்

பாதாள உலக குழு உறுப்பினர்களுக்காக ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட சீனிகொட பெட்டா எனப்படும் சரித் நிலங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், களுத்துறை மாவட்ட குற்ற பிரிவிற்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.