காரைதீவு வைத்தியசாலைக்கு ஆய்வுகூட வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு ஆய்வுகூட வசதியை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் ஆய்வுகூட வசதியின்மை காரணமாக சிகிச்சைக்காக வருபவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

நாளொன்றுக்கு 40 இரத்த மாதிரிகள் பிரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிள்ளது. வார்ட் அனுமதிக்கான நோயாளிகளின் இரத்த மாதிரியே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. வெளிநோயாளர் பிரிவிற்கு வருவோருக்கு இரத்தபரிசோதனை செய்வதில்லை.

அங்கு சேரிக்கப்படும் இரத்தமாதிரிகள் அனைத்தும் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பல மணித்தியாலங்களின் பின்னர் அதற்கான அறிக்கை கிடைக்கப்பெறுகின்றது.

குறித்த நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. காரைதீவின் தரத்திலான ஏனைய வைத்தியசாலைகளில் ஆய்வுகூட வசதி இருப்பதாக ஆய்வுகூட அலுவலர் இருப்பதாகக்கூறப்படுகிறது.

எனவே அந்த பரிசோதனை காரைதீவு வைத்தியசாலையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும். அல்லது தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையை வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவும் நிர்வாகமும் மேற்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.