தருமபுரம் ஆதீனத்தின் 5ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு

Report Print Dias Dias in சமூகம்

தருமபுரம் ஆதீனத்தின் 5ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு வெகு சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாடு அண்மையில் சென்னை அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவர்த்தனதாஸ் வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் தமிழக மற்றும் மலேசியா ஆதீனங்களின் முதல்வர்கள், சைவ சமய சான்றோர்கள் இலங்கை இந்து கலாச்சார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனித்தம்பி யோகேஸ்வரன், இந்து கலாச்சார திணைக்கள பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மற்றும் சுவிஸ் செங்காலன் சென்மார்க்கிறெத்தன் கதிர்வேலாயுத சுவாமி கோவில் நிர்வாக தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார், கனடா, இலண்டன் மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சைவப்பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.