அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டே நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.

நீதிமன்றின் அழைப்பாணை உத்தரவை சிங்கப்பூரில் வசிக்கும் அர்ஜூன் மகேந்திரனுக்கு அனுப்பி வைத்த பேதிலும், அவர் அந்த முகவரியில் இல்லையெனவும், அழைப்பாணை மீள திரும்பி வந்துள்ளதாகவும் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.