இராணுவ சார்ஜன்ட் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த இராணுவ சார்ஜன்ட் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரண்டு கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் சேவையாற்றி வருபவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 90 தோட்டக்கள், இரண்டு ரவைக்கூடுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.