கிணற்றுக்குள் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Report Print Rusath in சமூகம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவு முறக்கொட்டான்சேனைக் கிராமத்தில் வயோதிபரான குடும்பஸ்தரின் சடலத்தை நேற்று மாலை அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறக்கொட்டான்சேனை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி யோகராசா (வயது 60) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

அவரது மனைவியின் பற்கள் பிடுக்கப்பட்ட நிலையில் வீட்டில் மயக்க முற்றுக் கிடந்ததாகவும், வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.