ஹொரவ்பொத்தானை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹொரவ்பொத்தானை குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஹொரவ்பொத்தானை - வீரச்சோலை பகுதியைச்சேர்ந்த 63 வயதான முஸ்தபா லெத்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த வௌ்ளிக்கிழமை ஹொரவ்பொத்தானை நகரில் இருந்ததாகவும், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.