ஹட்டனில் இலங்கை மத்திய வங்கியின் நடமாடும் சேவை

Report Print Thirumal Thirumal in சமூகம்

வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் வேண்டுக்கோளுக்கு ஏற்ப நடமாடும் சேவையொன்று இன்று ஹட்டன் புருட்ஹில் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவைக்கு இலங்கை மத்திய வங்கியும், அதன் நுவரெலியா பிதேச காரியாலயமும், நுவரெலியா மாவட்ட செயலகமும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தன.

இலங்கை மத்திய வங்கியும் நுவரெலியா பிரதேச காரியாலயமும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் காணப்பட்ட பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தியதுடன் அதில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுத்தனர்.

இங்கு ஊழியர் சேமலாப நிதி பதிவில் காணப்பட்ட பெயர் மாற்றம், ஒப்பந்தத்தில் வித்தியாசம் பதிவு இலக்கத்தில் காணப்பட்ட சிக்கல்கள் என்பன தீர்க்கப்பட்டன.

நுவரெலியா பிரதேச செயலகம் இங்கு பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை சார்ந்த பல்வேறு விடயங்களை முன்னெடுத்து இருந்தது.

இந்த நடமாடு சேவையின் போது புகைப்படம் உட்பட தேவையான ஆவணங்கள் அனைத்தும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.