உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கூட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவுசங்க மண்டபத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் அதன் சட்ட வரையறைகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பில் விசேட கருத்தரங்கும் இதன்போது நடத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 79 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 27 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.