திகணையில் இயல்பு நிலையை ஏற்படுத்தும் சிரமதானம் : இராணுவம், பிக்குகள் பங்கேற்பு

Report Print Aasim in சமூகம்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட திகணைப் பிரதேசத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினரின் தலைமையில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டம் திகணைப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட அனைத்து கட்டடங்களையும் புனரமைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக தற்போது அப்பிரதேசத்தில் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகள் மற்றும் தீயில் எரிந்த சிதைவுகள் என்பவற்றை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் சிவில் நிர்மாணப் பிரிவினர் இதற்கான சிரமதானம் ஒன்றை திகணை பிரதேசத்தில் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பிரதேசத்தின் முக்கிய பௌத்த விகாரைகளின் பிக்குமார் சிலரும் இந்த சிரமதானங்களில் கலந்து கொண்டு சிங்கள-முஸ்லிம் நல்லுறவை பழைய நிலைக்கு கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.