சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Report Print Navoj in சமூகம்

கைத்தொழில் வாணிப அமைச்சினால் 2 மில்லியன் ரூபா பெறுமதியான சுயதொழிலுக்கான ஒதுக்கீட்டு வேலைத் திட்டமானது கடந்த 2017ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக மட்டக்களப்பில் வறிய நிலையில் தலைமை தாங்கும் குடும்ப பெண்களில் சுயதொழிலுக்காக உதவி கோரியவர்களினது பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களது விபரங்கள் கைத்தொழில் வாணிப அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சினால் உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 26 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று மாலை உதவி பிரதேச செயலாளர் பிருந்தா நிரூபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.