புதுக்குடியிருப்பில் குணாளன் மாஸ்டருக்கு அஞ்சலி

Report Print Mohan Mohan in சமூகம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டருக்கு இன்று புதுகுடியிருப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படும் ஜெ.மூர்த்தி என்பவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி சுவிஸ் நாட்டில் காலமானார்.

இந்நிலையில் புதுகுடியிருப்பு கைவேலிப் பகுதியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது

இந்த அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.