மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் மணி விழா நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப்பின் மணி விழா நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த மணி விழா நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

பல வருடங்களாக மக்கள் பணியாற்றிய இவரை கௌரவிக்கும் வகையில் அவரின் சேவை நலனை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின்போது சர்வ மதத்தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.