கிளிநொச்சியில் 8 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் வைத்து இன்று காலை 8 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த மரக்குற்றிகள் மற்றும் அதனை ஏற்றி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மறைத்து எடுத்து செல்லப்பட்ட குறித்த மரக்குற்றிகளே இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவின் விசேட மது ஒழிப்பு பிரிவினரே இவ்வாறு சோதனையிட்டு குறித்த மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்.