தந்தை, மகள், மகன் தீயில் கருகி பலி: காரணம் வெளியானது

Report Print Murali Murali in சமூகம்

கண்டி - திகன, ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகிய நிலையில், சடலமாக இன்று காலை மீட்கப்பட்டிருந்தனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தந்தையே தீ வைத்து பிள்ளைகளைக்கொலை செய்துள்ளதுடன், தானும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் வசித்த தந்தை, மகள், மகன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

மெனிகின்ன பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை 7.30 மணியளவில் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புஷ்பகுமார பிரேமதிலக்க (வயது 37), அவரது மகள் நவாஞ்சன பிரேமதிலக்க (வயது 13) மற்றும் மகன் கயான் பிரேமதிலக்க (வயது 05) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

பிள்ளைகளின் தாய் மத்திய கிழக்கு நாட்டில் வீட்டு பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

விசாரணைகளில், பொருளாதார நெருக்கடி காரணமாக தந்தையே தீ வைத்து பிள்ளைகளைக்கொலை செய்துள்ளதுடன், தானும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.