கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணிகள்

Report Print Suman Suman in சமூகம்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி அறிவியல் நகரின் யாழ். பல்கலைகழகத்தின் விவசாய பீடத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியிலேயே அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று மாலை நான்கு மணி தொடக்கம் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் பிரதேச கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பிரசன்னத்தின் மத்தியில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.