யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வுகள்

Report Print Sumi in சமூகம்

தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் புதுவருட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளதுடன், யாழ்ப்பாண பொலிஸாரின் ஏற்பாட்டில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் ஆண்களுக்கான மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகள் என்பன நடைபெற்றுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பமான போட்டிகளை யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னான்டோஆரம்பித்து வைத்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான போட்டிகள் ஊர்காவற்துறை வரை சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்து நிறைவடைந்தன.

மேலும், நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.