விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

Report Print Evlina in சமூகம்

புத்தளம் மாவட்டத்தில் வறட்சியால் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளமுடியாது பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

சுமார் 600 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் இரண்டு போகங்கள் எத்தகைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத பிரதேசங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், இங்கினிமிட்டிய திட்டத்திலுள்ள மிகவும் குறைந்த அளவில் உள்ள நீரைப் பயன்படுத்தி இந்த விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடுகளை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.