வவுனியா நகர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் போலி நாணயத்தாள்கள், வர்த்தக நிலையங்களிலும் புழக்கத்தில் இருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் போலி நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சிலாபத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 45000 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபர் விசேட அதிரடிப்படையினருக்கு சமையல் செய்பவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் குறித்த நபர் பல போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி வவுனியா வர்த்தக நிலையங்களில் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளதுடன் 1000 ரூபா பண நோட்டுக்களை பரீட்சித்து பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.