மட்டக்களப்பில் களைகட்டியுள்ள சித்திரை வியாபாரம்

Report Print Rusath in சமூகம்

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்கள் மட்டக்களப்பில் களைகட்டியுள்ளன.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில் வியாபாரங்கள் மும்முரமாக இடம்பெறுவதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், புத்தாடைகள், மரக்கறி வகைகள், மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நகரத்தில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றதுடன், புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் ஆயத்தமாகி வருகின்றனர்.