தனியார் பேருந்து விபத்து: கைக்குழந்தை உள்ளிட்ட அறுவர் படுகாயம்!

Report Print Theesan in சமூகம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்ளிட்ட அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்றுமதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், விபத்து இடம்பெற்றவுடன் பேருந்தின் சாரதி தப்பி ஓட முற்பட்டதாகவும் அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.