சட்டவிரோதமாக விற்பனைக்குக் கொண்டுச்சென்ற மதுபானபோத்தல்களுடன் மூவர் கைது

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிற்குட்பட்ட புன்னச்சோலை பகுதியில் சட்டவிராதமான முறையில் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றும் நாளையும் மதுபான விற்பனைக்காக தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக விற்பனைசெய்யும் வகையில் இந்த மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மதுபானசாலைகள் அனைத்தையும் அரசாங்கம் மூடுமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில் சட்டவிரோத மதுபான விற்னைகளை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தி.ஹகவத்துற தலைமையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் புன்னைச்சோலையில் விசேட நடவடிக்கைகயில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியில் பெட்டிகளில் மறைக்கப்பட்ட நிலையில் மிகவும் இரகசியமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட இந்த மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது முழு மதுபான போத்தல்கள் 13 மற்றும் அரை போத்தல்கள் 48உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தி.ஹகவத்துற தெரிவித்தார்.

இது தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.