ஹட்டன் கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் ஆற்றிட்கு அருகாமையில் உள்ள கால்வாயிலிருந்து இன்று மதியம் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா தோட்டம், டிக்கோயா பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராமசாமி சிவாநாதன் (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கால்வாயில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

ஹட்டன் நகரப்பகுதிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று இரவு சென்றவர், இன்று காலை வரை திரும்பி வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் அவரை தேடியுள்ளனர். இதனையடுத்து இவர் இவ்வாறு கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.