மலையகத்தில் மழையுடன் பிறக்கிறது விளம்பி வருடம்! உற்சாகத்துடன் மக்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சித்திரை மாதம் 1ஆம் திகதி அதாவது (14) நாளை காலை 7 மணிக்கு விளம்பி வருடம் பிறக்கின்றது.

இது சூரியபகவான் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் ஆகும். இந்த நிலையில் மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு இன்று மழையையும் பொருட்படுத்தாமல் ஹட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது அத்தியாவசிய பொருட்களை மக்கள் கொள்வனவு செய்துள்ளதுடன், இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் புத்தாண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் இன்று ஹட்டன் நகரில் குவிந்துள்ளனர்.

அத்தோடு புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.