வவுனியாவில் உற்சாகத்துடன் பிறக்கின்றது விளம்பி வருடம்

Report Print Theesan in சமூகம்

தமிழ் - சிங்களப் புத்தாண்டினை கொண்டாட வவுனியா நகர மக்கள் ஆயத்தமாக உள்ளனர்.

பிறக்க இருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும், வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் வவுனியா பழைய பேருந்து நிலையம் , மணிக்கூட்டு கோபுர சந்தியடி , அங்காடி வியாபாரி நிலையம் , புகையிரத வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் வழமை போன்றே காணப்படுகின்றது.

இதேவேளை, வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகாமையில் இன்றுடன் 414வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது உறவுகளை தேடி சுழற்சி முறையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.