மட்டக்களப்பில் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜைகள்

Report Print Kumar in சமூகம்

தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட பூஜைகள் வழிபாடுகள் இன்று காலை நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளன.

இதேவேளை கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது நாட்டில் நிலையான சமாதானம் வேண்டியும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டியும் விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.