வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் சித்திரை தேர்பவனி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா ஆதிவிநாயகர் தேவஸ்தானத்தின் சித்திரை தேர்பவனி மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஆறாம் திகதி ஆரம்பமாகிய நிலையிலேயே இன்று தேர்பவனி இடம்பெற்றுள்ளது.

இந்த தேர்பவனியின் போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை தீர்த்துள்ளனர்.

புதுவருட தினம் ஆகையால் அடியார்கள் பலரும் புத்தாடைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்டு ஆதிவிநாயகப் பெருமானனின் அருளினைப் பெற்றுக் கொண்டனர்.