சிறுவர்களிடம் தமிழில் பேசிய பொலிஸ் அதிகாரி! முல்லைத்தீவில் சம்பவம்

Report Print Dias Dias in சமூகம்

முல்லைத்தீவு, நெடுங்கேணி பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறு பிள்ளைகளிடம் தமிழில் கலந்துரையாடியுள்ளமை தற்போது அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, நெடுங்கேணி கரடிப்புலவு அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, அங்கு கலந்து கொண்ட ஒட்டுசுட்டான் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிறுவர்களிடம் சகஜமாக கலந்துரையாடியுள்ளார்.

தான் ஒரு கமக்கார குடும்பத்தில் பிறந்தவன் என்றும், எனவே பெற்றோர்களின் துயரத்தை நானும் அறிவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வளருகின்ற பிள்ளைகள் கல்வி கற்கவேண்டும் என்றும், அதன் மூலம் பெரிய உத்தியோகம் ஒன்றை செய்ய வேண்டும் எனவும் அவர் இதன்போது சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.