தேற்றாத்தீவில் திடீரென தீப்பற்றி கொண்ட மோட்டார்சைக்கிள்

Report Print Kumar in சமூகம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்து மோட்டார்சைக்கிளில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக நேர்ந்துள்ளதாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீயினை அயலவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.