காணாமல்போய்வரும் தமிழரின் பாரம்பரியம்

Report Print Kumar in சமூகம்

இயந்திரமயமான வாழ்க்கையில் தமிழர்களின் பாரம்பரியங்கள் காணமல்போய்வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

முடங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டுசெல்லவேண்டும் அந்த பாரம்பரியங்களை காப்பாற்றவேண்டும் என்பதற்காகவுமே 2012ஆம் ஆண்டு தொடக்கம் ஊஞ்சல் விழா நடாத்தப்பட்டுவருகின்றது.

இன்று தமிழர்களின் கலை கலாச்சாரங்கள் சுருக்கப்பட்டு ஒரு உலகமயமாக்கலில் வாழ்ந்துவருகின்றோம். இந்த உலக மயமாக்கல் காரணமாக தொடர்ச்சியாக எமது பாரம்பரிய கலைகளை வளர்க்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னைய காலங்களில் ஆலய விழாக்களில் தமிழர்களின் பாரம்பரிய கலையான கூத்துக்கலை மேடையேற்றப்பட்டுவந்தது. இன்றைய சமூகத்தினர் அந்த கலையினை உள்வாங்கும் தன்மை குறைந்துவருகின்றது.

இவ்வாறான உலகமயமாக்கல் காரணமாக இயந்திரமயமான வாழ்க்கையில் மறைந்துசெல்லும் தமிழர்களின் கலைகளை வளர்க்கும் வகையிலேயே இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துகின்றோம் என குறிப்பிட்டார்.