புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதான விபத்துக்களில் வீழ்ச்சி

Report Print Kamel Kamel in சமூகம்

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதான விபத்துச் சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் புத்தாண்டு கொட்டாட்டங்களின் போதான விபத்துக்களின் எண்ணிக்கை 3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குமார விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 என குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு தொடர்பான விபத்துகளினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஒன்று எனவும், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஆறாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.