610 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழும் துணுக்காய் பிரதேசம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 610 வரையான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்ந்துவருவதாக பிரதேச செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவின் கீழ் 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மூவாயிரத்து 942 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 227 பேர் மீள்குடியேறியிருக்கின்றனர்.

இவர்களின் 610 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன, இதேவேளை 311 வரையான மாற்றுத்திறனாளிகளும் காணப்படுவதாக மேற்படி பிரதேச செயலகப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.