ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் பலி: தாய் வைத்தியசாலையில்

Report Print Thirumal Thirumal in சமூகம்

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின், எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், தாய் படுகாயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் எல்ல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 38 வயதுடைய தந்தையும், 4 வயது மகனுமே உயிரிழந்துள்ளனர்.

தந்தையால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.