காரைதீவு கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

விளம்பி வருட சித்திரை புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சமுத்திர படகோட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.

குறித்த போட்டி நேற்றைய தினம் கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டுள்ளது.

காரைதீவு கடலில் நடைபெற்ற இந்த போட்டியில் 10 இயந்திரப் படகுகள் பங்குபற்றியிருந்தன.