புத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத சாரதிகள்: 140 பேர் கைது

Report Print Aasim in சமூகம்

புத்தாண்டு தினத்தின் பின்னரும் போதையில் வாகனத்தை செலுத்திய சாரதிகள் 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் நாடு முழுவதும் போதையில் வாகனம் செலுத்திய சுமார் 10,000 சாரதிகள் பொலி]hரின் சோதனையில் மாட்டியிருந்தனர்.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தின் பின்னரான 24 மணிநேரத்தில் மேலும் 140 பேர் போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பொலி]hரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 20 பேரும், அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 166 பேருக்கு எதிராகவும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.