மட்டக்களப்பு மாநகர சபையின் கன்னி அமர்வில் தியாக தீபம் அன்னை பூபதிக்கு அஞ்சலி

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகர சபையின் கன்னி அமர்வில் தியாக தீபம் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 2ஆவதும், மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவது அமர்வும் இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் வி.தவராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க சபையினரின் ஏகோபித்த சம்மதத்துடன், தியாக தீபம் அன்னை பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவாக 3 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.