குமுழமுனையில் மோதல்! ஐவர் படுகாயம்

Report Print Mohan Mohan in சமூகம்

குமுழமுனைப்பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆலய நிகழ்வு ஒன்றில் இன்று இரவு கலந்திருந்த இந்த குழுவினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த குழுமோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.