பிணையில் விடுதலையான மகிந்தானந்தவுக்கு ஏற்பட்டுள்ள நிலை: மீண்டும் விளக்கமறியல்

Report Print Murali Murali in சமூகம்

பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு இன்று காலை வருகை தந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டிருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, இடம்பெற்றதாக கூறப்படும் 53 மில்லியன் நிதி மோசடி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே இவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 35,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 500,000 ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவித்து கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய கடவுச்சீட்டு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எ​ன்ற பிணை நிபந்தனை நிறைவேற்றப்படவில்லை.

இதனால், மஹிந்தானந்த அளுத்கமகேவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.