சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு களுதாவளையில் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - களுதாவளை, கெனடி விளையாட்டுக் கழகத்தின் 60வது ஆண்டு நிறைவையும், சித்திரைப் புத்தாண்டையும் முன்னிட்டு கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று மாலை கழகத் தலைவர் சோ.திருநாவுக்கரசு தலைமையில், உள்ளூர் பொது அமைப்புக்கள், மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் நடைபெற்றுள்ளது.

இதன்போது, விழாவில் வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சமர், கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல், மரதன் ஓட்டம், முட்டைமாற்றுதல், உள்ளிட்ட பல்வேறு கலாசார விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், வெற்றிக் கேடையங்களும், காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், உதவிக் காணி ஆணையாளர் கு.பிரணவன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கணக்காளர் ஆர்.கார்த்திகேசு, வைத்தியர் வி.இளங்கோ மற்றும் கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.