மேலாடையுடன் மோசமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பெண்!

Report Print Vethu Vethu in சமூகம்

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற பெண்ணொருவர், மேலாடையுடன் மட்டும் இலங்கையை வந்தடைந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குருணாகலை சேர்ந்த கண் தெரியாத 58 வயதுடைய பணிப்பெண் ஒருவருக்கு, மேல் ஆடை ஒன்று மாத்திரம் அணிவித்து சவுதியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குருணாகலை, பிலிஸ்ஸ மடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே மீண்டும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு சேவை அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

10 வருடங்களாக சவுதியில் பணிப்பெண்ணான சேவை செய்த அந்த பெண்ணின் சம்பளம் அல்லது சொத்துக்கள் இன்றி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை தூதரகத்தினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அபாயா எனப்படும் மேல் ஆடை மாத்திரம் அணிவித்து இலங்கைக்கு அனுப்புவதற்கு சவுதிக்கான இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 40 வருடங்கள் குவைத்தில் பணிப்பெண்ணாக சேவை செய்த 72 வயதுடைய வயோதிப பெண்ணை குவைத் அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எந்தவித பணம் அல்லது சொத்துக்கள் இன்றி அனுப்பப்பட்ட அந்த பெண்ணிற்கு பொறுப்பாளர்கள் ஒருவரும் இல்லாமையினால் கட்டுநாயக்கவில் உள்ள தடுப்பு முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.