யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலை: மன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

Report Print Shalini in சமூகம்

யாழ். ஊர்காவற்துறை, சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணித் தாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை இரு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்போது, கொலை தொடர்பான விசாரணையில் எதுவித முன்னேற்றமும் இல்லையென தெரிவித்து, வழக்கை குற்றப்புலானாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு இரு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் வழக்கு தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, 2017 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி யாழ். ஊர்காவற்துறை, சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணி தாயான ஹம்சிகா விசமிகளால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பில் இரு சகோதரர்களை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.